Summary

குழந்தைகளுக்கு கட்டுப்பாடு மட்டும் போதுமா? தவறு செய்வது முதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது வரை குழந்தைகள் பெற வேண்டிய 7 முக்கிய சுதந்திரங்கள் குறித்து Dr. Mehar Nithyan விளக்குகிறார்.

Article Body

குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடு தேவையா? அவர்கள் பெற வேண்டிய 7 சுதந்திரங்கள் குறித்து உளவியல் பார்வை
குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடு தேவையா? அவர்கள் பெற வேண்டிய 7 சுதந்திரங்கள் குறித்து உளவியல் பார்வை
குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய 7 சுதந்திரங்கள் என்ன? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உளவியல் பார்வை

குழந்தை சத்தமாகப் பேசுகிறது. பொருட்களைக் கலைத்துப் போடுகிறது. அடம்பிடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. சில நேரங்களில் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் தனக்குப் பிடித்ததைச் செய்கிறது.

இவற்றைப் பார்க்கும்போது பல பெற்றோர்களின் முதல் எதிர்வினை என்ன?

“இதை உடனே திருத்த வேண்டும்.”

ஆனால் குழந்தை செய்யும் ஒவ்வொரு தவறும் தவறான நடத்தை அல்ல. விளையாடுவது, ஆராய்வது, கேள்விகள் கேட்பது, முயற்சி செய்வது, தோல்வியடைவது, மீண்டும் முயற்சி செய்வது போன்ற அனுபவங்கள் குழந்தையின் இயல்பான வளர்ச்சியின் பகுதிகளாக இருக்கலாம்.

அதனால் குழந்தை வளர்ப்பில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி:

“என் குழந்தையை எப்படி கட்டுப்படுத்துவது?” என்பதா?

அல்லது,

“தன்னைப் புரிந்துகொண்டு, பொறுப்புடன் வளரக்கூடிய பாதுகாப்பான சூழலை எப்படி உருவாக்குவது?” என்பதா?

குழந்தைகளுக்கு எல்லைகளே தேவையில்லை என்பது இதன் பொருள் அல்ல. வயதிற்கேற்ற பாதுகாப்பான எல்லைகள் அவசியம். அதே நேரத்தில், தேவையற்ற பயம், தொடர்ச்சியான விமர்சனம், ஒப்பீடு மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடு இல்லாமல் வளர்வதற்கான இடமும் குழந்தைகளுக்குத் தேவை.

அந்த வகையில், குழந்தைகளின் ஆரோக்கியமான உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய 7 முக்கியமான சுதந்திரங்களை பெற்றோர்கள் புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

1. தவறு செய்வதற்கான சுதந்திரம்

தவறுகள் குழந்தைகளின் இயல்பான கற்றல் அனுபவங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஒவ்வொரு தவறுக்கும் உடனடியாக திட்டுவது, குறை கூறுவது அல்லது அவமானப்படுத்துவது என்பதற்குப் பதிலாக,

“என்ன நடந்தது?”
“இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?”
“அடுத்த முறை வேறு எப்படி செய்யலாம்?”

என்று பேசிப் பாருங்கள்.

தவறை மறைக்கக் கற்றுக்கொடுப்பதை விட, தவறிலிருந்து கற்றுக்கொள்ள உதவுவது முக்கியம்.

2. பெற்றோரின் மனஅழுத்தத்தின் தாக்கத்திலிருந்து சுதந்திரம்

வேலை அழுத்தம், பொருளாதாரப் பிரச்சனைகள், குடும்பப் பொறுப்புகள் அல்லது தனிப்பட்ட மனவேதனை பெற்றோருக்கும் இருக்கலாம்.

ஆனால் பெரியவர்களின் accumulated stress குழந்தையின் சிறிய தவறுக்கான பெரிய தண்டனையாக மாறிவிடக்கூடாது.

குழந்தையின் behaviour நம்மை அதிகமாக trigger செய்தால்,

“இப்போது பிரச்சனை முழுவதும் குழந்தையின் நடத்தையில்தானா, அல்லது நான் ஏற்கனவே stress-ல் இருக்கிறேனா?”

என்று பெற்றோர்கள் தங்களையும் கவனித்துப் பார்ப்பது முக்கியம்.

3. தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ளும் சுதந்திரம்

ஒவ்வொரு நிமிடமும் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை.

சில நேரங்களில் குழந்தைக்கு நேரமும் வாய்ப்பும் கொடுத்தால், தன்னுடைய செயலின் விளைவுகளைப் புரிந்துகொண்டு தானாகவே மாற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கலாம்.

அதற்கு குழந்தைக்கு தேவைப்படுவது பயம் மட்டுமல்ல.

நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் emotional safety.

4. அதிகப்படியான கட்டளைகள் மற்றும் எதிர்பார்ப்புகளிலிருந்து சுதந்திரம்

“இதைச் செய்.”

“அதைச் செய்யாதே.”

“எத்தனை முறை சொல்வது?”

“ஏன் இன்னும் முடிக்கவில்லை?”

என்ற மொழியே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், பெற்றோர்–குழந்தை உறவு கட்டளை மற்றும் எதிர்ப்பு என்ற pattern-க்கு செல்லலாம்.

அதற்குப் பதிலாக,

“உன் plan என்ன?”

“இதற்கு என்ன உதவி வேண்டும்?”

“நீ இதை பொறுப்பாகச் செய்வாய் என்று நான் நம்புகிறேன்.”

என்ற உரையாடல்கள் குழந்தையின் வயதுக்கும் திறனுக்கும் ஏற்ற இடங்களில் பயன்படுத்தப்படலாம்.

5. வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சுதந்திரம்

குழந்தைகள் விளையாடட்டும்.

ஓடட்டும்.

இயற்கையை அனுபவிக்கட்டும்.

புதிய விஷயங்களை முயற்சி செய்யட்டும்.

வயதிற்கேற்ற சிறிய சவால்களை எதிர்கொள்ளட்டும்.

பெற்றோரின் பொறுப்பு உண்மையான ஆபத்துகளிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பது.

ஆனால் உலகமே ஆபத்தானது என்ற பயத்தை குழந்தைக்குள் உருவாக்காமல் இருப்பதும் முக்கியம்.

6. தங்கள் உடலைப் புரிந்துகொள்ளும் சுதந்திரம்

சிறிய உடல்நல மாற்றங்கள் ஏற்பட்ட உடனே குழந்தையை குற்றம் சுமத்துவது அல்லது பயமுறுத்துவது தேவையற்ற health fear-ஐ உருவாக்கக்கூடும்.

அதற்குப் பதிலாக உடலைப் பராமரிப்பது, தேவையான ஓய்வு, உணவு, hygiene மற்றும் சரியான மருத்துவ உதவி எப்போது தேவை என்பதை வயதிற்கேற்ற முறையில் கற்றுக்கொடுக்கலாம்.

உடலைப் பற்றி குழந்தைக்கு பயம் அல்ல, புரிதல் உருவாக வேண்டும்.

7. உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மகிழ்வதற்கான சுதந்திரம்

குழந்தை சிரிக்கட்டும்.

அழ வேண்டிய நேரத்தில் அழட்டும்.

கேள்விகள் கேட்கட்டும்.

கருத்துகளைப் பகிரட்டும்.

விளையாடட்டும்.

“அழாதே”, “பயப்படாதே”, “கோபப்படாதே” என்று உணர்ச்சியை உடனடியாக நிறுத்த முயற்சிப்பதை விட,

“என்ன நடந்தது?”

என்று கேட்டு அந்த உணர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவலாம்.

சுதந்திரம் என்றால் எல்லைகள் இல்லாத வளர்ப்பு அல்ல

குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பது என்பது அவர்கள் விரும்பிய அனைத்தையும் செய்ய அனுமதிப்பது அல்ல.

தங்களையோ மற்றவர்களையோ பாதிக்கும் செயல்களுக்கு பாதுகாப்பான எல்லைகள் அவசியம்.

ஆனால் அந்த எல்லைகளை உருவாக்கும் விதம் முக்கியம்.

பயத்திற்குப் பதிலாக வழிகாட்டுதல்.
தண்டனைக்கு முன்பு புரிதல்.
அதிகப்படியான கட்டுப்பாட்டிற்குப் பதிலாக இணைப்பு.
விமர்சனத்திற்குப் பதிலாக தெளிவான, கருணையுள்ள எல்லைகள்.

குழந்தைகள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக மட்டும் வளரவில்லை.

அவர்கள் ஆராய்கிறார்கள்.

கற்றுக்கொள்கிறார்கள்.

தவறு செய்கிறார்கள்.

மீண்டும் முயற்சி செய்கிறார்கள்.

அப்படித்தான் தங்களைப் பற்றியும் இந்த உலகைப் பற்றியும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கு நாம் வழங்கக்கூடிய முக்கியமான பாதுகாப்புகளில் ஒன்று:

“நான் நேசிக்கப்படுகிறேன். என் உணர்வுகள் கேட்கப்படுகின்றன. தவறு செய்தாலும் என்னை வழிநடத்த ஒருவர் இருக்கிறார். நான் பாதுகாப்பாக வளர முடியும்.”

என்ற அனுபவத்தை உருவாக்கும் உறவு.

இந்த சுதந்திர தினத்தின் செய்தியாக குழந்தைகளுக்கு அன்பின் வேர்களையும், பாதுகாப்பான எல்லைகளையும், சுதந்திரமாக வளர்வதற்கான சிறகுகளையும் கொடுப்போம்.

Dr. Mehar Nithyan, PhD (Psychology)
Founder – Calmscious Psychotherapy Clinic







 

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)

  • Mehar photo

    Mehar

    Dr. Mehar Nithyan | Mental Health Expert & Founder of Calmscious

    Explore articles and mental health insights from Dr. Mehar Nithyan, founder of Calmscious, covering anxiety, stress, depression, emotional wellness, relationships, and personal growth.

    View all articles by Mehar

Published by · Editorial Policy

Calmscious — Mental Health Insights, News & Stories in Tamil — Real stories, expert insights and practical guidance on anxiety, stress, depression & relationships — in Tamil and English, from Dr. Mehar's team.